எமது பாடசாலைக்கு வரவேற்கின்றோம்!
எமது பாடசாலை வடமத்திய மாகாண அநுராதபுர மாவட்டத்திலுள்ள பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளால் சூழப்பட்டுள்ள அங்குநொச்சிய எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. தரம் 1 தொடக்கம் 13 வரையான வகுப்புக்களையும் சுமார் 850 மாணவர்களையும் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்றது.