அ/அல்மாஸ் மஹா வித்தியாலயம் 1952.10.20 ஆம் திகதி அங்குநொச்சிய எனும் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது அங்குநொச்சிய, குளுமிவாக்கடை, குபுகொள்ளாவ, முக்கரவெவ ஆகிய 4 கிராமங்களுக்குமான பாடசாலையாக ஆரம்பமானது. இதன் முதல் அதிபராக மு.நாகேந்திரன் விளங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து 1993 இல் க.பொ.த.(சா/தரம்) பரீட்சைக்கு மாணவர்கள் தயார்படுத்தப்பட்டதோடு, 2003 ஆம் ஆண்டு க.பொ.த.(உ/தரம்) வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனடிப்படையிலேயே இப்பாடசாலை 1C பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு வணிகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
இப்பாடசாலையில் தரம் 5, க.பொ.த.(சா/தரம்), க.பொ.த.(உ/தரம்) ஆகிய அரச பரீட்சைகளுக்கு அச்சமின்றி தோற்றி பல்வேறு சாதனைகளை நிலை நாட்டியதுடன் வலயத்தில் இருக்கும் 18 முஸ்லிம் பாடசாலைகளில் குறிப்பிடத்தக்க நிலையில் நிற்கின்றது என்பதை குறிப்பிட்டுக் கூற முடியும். எதிர்வரும் காலங்களில் பாடசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு 2023ம் ஆண்டாகும் போது சகோதர மொழி பாடசாலைகளுடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு முன்னேற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.