அதிபரின் வாழ்த்துச் செய்தி
அ/அல்மாஸ் மஹா வித்தியாலயம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அனுராதபுர மாவட்டத்தின் கெபிதிகொள்ளாவ கல்வி வலயப் பாடசாலையான எமது அ/அல்மாஸமஹா வித்தியாலயத்தின் இணையத்தளமானது மாணவர்களின் தேடலுடனும் புதிய பரிணாமத்துடனும் பரிணமிக்கின்றது.
எதிர்கால தலைவர்களான எமது மாணவச் செல்வங்களின் எதிர்காலம் வளமாகவும் அவர்களின் தேடற்திறன், ஆக்கத்திறன் மற்றும் தொழிநுட்பத்த்திறன் என்பவற்றை விருத்தி செய்யும் வகையிலும் இவ்விணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்விணையத்தளம் மாதாந்தம் இற்றைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். எதிர்காலத்தை வெற்றி கொள்ள வேண்டிய மாணவச் செல்வங்களை நேரான வழியில் இட்டுச் செல்ல உழைக்கும் ஆசிரியர்களுக்கும் இச்செயற்றிட்டத்தில் இணைந்து செயற்பட்ட அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஏ.ஜே.எம். தௌபீக்
அதிபர்
அ/அல்மாஸ் மஹா வித்தியாலயம்