உப அதிபரின் வாழ்த்துச் செய்தி
அ/அல்மாஸ் மஹா வித்தியாலயம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அ/அல்மாஸ் மஹா வித்தியாலயம் தனது கல்விப் பயணத்தில் பல தடைகளைத் தாண்டி வெற்றிப் பாதையில் பயணிக்கின்றது என்பது மகிழ்ச்சியை தருகின்றது. பாடசாலைத் தொடர் வெற்றிப் பயணத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஒன்றாக எமது பாடசாலைக்குரிய உத்தியோகபூர்வ இணயத்தளத்தை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
மேலும் 21ஆம் நூற்றாண்டு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான திறமைகளை மாணவர்களுக்கு உருவாக்குவதில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்கு அளப்பரிய பங்குண்டு.
இவ்விணையத் தளத்தை வடிவமைத்து, வெளியிடுவதற்கு அர்ப்பண சிந்தனையுடன் ஈடுபடும் இப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தக்கொள்கின்றேன்.
ஏ.எம்.ஏ. ரஹீம்
உப அதிபர்
அ/அல்மாஸ் மஹா வித்தியாலயம்